தமிழ்நாடு

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு: சீறிப் பாயும் காளைகள் (படங்கள்)

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

DIN

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டான தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள தச்சன்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வாடிவாசலில் காத்திருக்கும் காளைகள்

முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டு

காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி ,தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல், கந்தர்வகோட்டை  உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. 

பதிவு செய்யப்பட்ட காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலை நோக்கி அனுப்பி வைக்கப்படுகின்றன.

காளையின் கொம்பில் ரப்பர் உறை

வீரர்கள் காயமுறுவதைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் கால்நடை துறை சார்பில் ரப்பர் உறை அணிவிக்கப்பட்டுள்ளது.

700-க்கும் மேற்பட்ட காளைகளும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் களம் காண்கின்றனர்.

மக்கள் ஆயிரக்கணக்கில் ஜல்லிக்கட்டைப் பார்வையிட குவிந்துள்ளனர்.

பார்வையிட திரண்ட மக்கள்

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிக்க மோட்டார் சைக்கிள், சைக்கிள், மிக்ஸி,  கட்டில், இரும்பு பீரோ, சில்வர் அண்டா, மின்விசிறி போன்ற பரிசு பொருள்களும் ரொக்க பரிசும் அளிக்கப்படவுள்ளன.

ஜல்லிக்கட்டு திடல்

ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகம் அருகே மருத்துவதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்  அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT