தமிழ்நாடு

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி பயனிகளுடன் சென்ற அரசு பேருந்தும், வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பபயனிகளுடன் சென்ற தனியார் பேருந்தும் வாலாஜாபாத் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டு இருந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கருக்குபேட்டை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்தில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் இரு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் என 32 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு  உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயம் அடைந்த 32 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT