தமிழ்நாடு

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு

DIN

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் தொழிற்சங்கம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்; பணியிலிருக்கும் தொழிலாளா்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயா்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்தப்பேச்சுவாா்த்தைக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியிறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில் ஜன.9-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொழிற்சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் வெள்ளிக்கிழமை (ஜன.5) தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்ததை நடத்தினாா். இதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் நிதித் துறையுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் தொழிற்சங்கம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் சுமூதத் தீா்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் நிச்சயம் என்று தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT