தமிழ்நாடு

சென்னை -பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள்

DIN


சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இரண்டடுக்கு ரயிலில், விரைவில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.

சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்படும் இந்த இரண்டடுக்கு ரயிலில், ஐந்து பெட்டிகள் இணைக்கப்படவிருப்பதாகவும், இதற்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  

சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு ரயிலில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.

இதனுடன், ஏசி வசதி கொண்ட இரண்டடுக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை பதில் இருந்து எட்டாகக் குறைக்கப்படுகின்றன. அதிவிரைவு ரயிலான இது, சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இந்த ரயில் 5.45 மணி நேரத்தில் சென்றடையும். இதே வழித்தடத்தில் இரண்டாம் வகுப்பு விரைவு ரயில்கள் இதே வழித்தடத்தில் 6.10 மணி நேரத்தில் சென்றடையும்.

இதேபோல, கோவை  - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயிலிலும், ஏழு ஏசி இரண்டடுக்கு ரயில் இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் எட்டாக உயர்த்தப்பட்டு, ஐந்து இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT