தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? மஹிந்திராவுக்கு சாட்ஜிபிடி கொடுத்த பதில்!

தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்துள்ள பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். 

DIN


தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்துள்ள பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த இரு நாள்களாக (ஜன.7, 8) நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பங்கேற்றார். அப்போது பேசிய ஆனந்த் மஹிந்திரா, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது சிறந்தது ஏன்? என்ற கேள்வியை சாட் ஜிபிடியிடம் எழுப்பினேன். அது வியக்கத்தக்க பதிலை அளித்தது. தமிழ்நாட்டில் வலுவான உள்கட்டமைப்பு, திறமைமிக்க ஊழியர்கள், மேம்பட்ட துறைமுகங்கள், சிறந்த கல்விமுறை மற்றும் அரசு ஆதரவு உள்ளிட்ட காரணங்களை சாட்ஜிபிடி குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டினார். 

இங்கே மேடையில் பேசுவதற்கு  சாட்ஜிபிடியால் வரைவு செய்யப்பட்ட ஒரு முழுமையான உரையை நான் பெற்றிருக்க முடியும். பொதுவாக நான் செய்யறிவு இயந்திரங்களை விட மனிதர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவன். உங்கள் சுய அனுபவத்தை நீங்கள் நம்பினால், வேறுவகையான உரையை உங்களால் கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT