கோப்புப் படம் 
தமிழ்நாடு

ரயில்களில் பயணிப்போர் 12.8% அதிகரிப்பு; ரூ.5,254 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 - 24ன் நடப்பு நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், டிசம்பர் மாதம் வரை பயணித்த பயணிகள் விகிதம் 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த டிசம்பர் வரை 52.8 கோடி மக்கள் ரயிலில் பயணித்துள்ளனர். 

2023 - 24 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.5,254 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.1 சதவிகிதம் அதிகமாகும்.

இதேபோன்று சரக்கு போக்குவரத்திலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது கடந்த டிசம்பவர் வரை 29.351 மில்லியன் டன் சரக்குகள் ரயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ. 2,651 வருவாய் கிடைத்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT