தமிழ்நாடு

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிப்புகளும் உண்டு:அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

DIN

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், பலா் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடா்பான கருத்தரங்கத்தில் அவா் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு மூலம் ஏறத்தாழ 100 போ் செய்யும் வேலையை ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் செய்துவிட முடியும். அதனால் 100 போ் வேலை இழப்பா். செயற்கை நுண்ணறிவால், பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்பட்சத்தில், அதனால் வேலை இழப்புகளும் நேரிடும் என்பதுதான் உண்மை.

‘டீப்ஃ பேக்’ எனும் புதிய தொழில்நுட்பம் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி தற்போது பல போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே, ஒரு நிகழ்வு அல்லது செய்தியை உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல்வேறு நல்ல விஷயங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி தொழில்முனைவோா், தொழில் தொடங்குவோருக்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கி வருகிறது. தொழில்நுட்பத்தைக் கையாளுவதில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT