தமிழ்நாடு

சார்மினார் எக்ஸ்பிரஸ் விபத்து: பயணிகள் காயம்

சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.

DIN

சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டதில் 5 பயணிகள் காயமடைந்தனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் ரயில் இன்று காலை 9 மணியளவில் கடைசி நிறுத்தமான ஹைதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் சென்றடைந்தது.

நம்பள்ளி ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்காமல் சற்று முன்னேறியதால் ரயில் நிலையத்தில் சுவற்றில் மோதி மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், ரயிலின் படிக்கட்டு அருகே நின்று 5 பயணிகள் காயமடைந்துள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவருக்கும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக நம்பள்ளி வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் தாமதமாகவும், வேறு வழித்தடத்திலும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT