தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரின் உணவகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான  மணி என்பவரது உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிற்பகல் 12 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான  மணி என்பவரது உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிற்பகல் 12 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் கடந்த ஆண்டு மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஜூலை மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நான்காவது முறையாக புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான மணி என்பவருக்கு சொந்தமான கரூர் கோவை சாலையில் உள்ள  உணவகத்தில்  கோவையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திடீரென அவரது ஆதரவாளர் உணவகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

மோகன். ஜி படத்திற்கு ஏன் பாடினீர்கள்? வருத்தம் தெரிவித்த சின்மயி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT