இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 
தமிழ்நாடு

மதுரை துணை மேயர் வீட்டில் சமூக விரோதிகள் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

மதுரை மாநாகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீட்டில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்டு

DIN


மதுரை மாநாகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீட்டில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், மதுரை மாநாகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீட்டில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் நாகராஜன் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.நீண்ட காலமாக பொது வாழ்வில் இருப்பவர். இவரது வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளனர் என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, அவர்களில்  எவரும் சட்டத்தின் சந்து,பொந்துகளையும், இண்டு, இடுக்களையும் பயன்படுத்தி தப்பி விடாமல் வழக்கை உறுதியாக நடத்தி தண்டிக்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள காரணங்களும் முழுமையாக விசாரித்து எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என  அரசையும், காவல்துறையும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT