கோப்புப்படம் 
தமிழ்நாடு

மதுரை ஜல்லிக்கட்டில் 12,176 காளைகள் பங்கேற்பு!

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,176 காளைகளை முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

DIN

மதுரை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,176 காளைகளை முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறும்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 12,176 காளைகளையும், 4,514 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அலங்காநல்லூரில் பங்கேற்க 6,099 காளைகள், 1,784 வீரர்களும், அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 வீரர்களும், பாலமேட்டில் 3,677 காளைகள், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

திமுக அரசில் தரமற்ற பள்ளிக் கட்டடங்கள், இடைநிற்றல் சதவிகிதம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்நாடக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!

தூங்காத விழிகள் இரண்டு... ஸ்ரீநந்தா சங்கர்!

சீரற்ற சீர்... மன்மீத் கௌர்!

SCROLL FOR NEXT