தமிழ்நாடு

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி!

சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

சேலம்: சேலத்துக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்துக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அப்போது பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்திலிருந்து கோவைக்கு ஆளுநர் செல்லவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் விவகாரம்: நவ 7-ல் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்: உச்ச நீதிமன்றம்

பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: இந்திய ஜனநாயகத்தின் மைல்கல் - ஞானேஷ் குமார்

ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி!

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட குடிபோதை நபர் கைது!

சரிவில் இந்திய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

SCROLL FOR NEXT