தமிழ்நாடு

கடனுதவி விழிப்புணா்வு முகாம் ஜன.13 வரை நடக்கிறது

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் கடனுதவி பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை(ஜன.13) வரை நடைபெறுகிற

DIN

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் கடனுதவி பெறுவதற்கான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை(ஜன.13) வரை நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்தி:

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறு

சீரமைப்புக்கான நிதியுதவி வழங்க தொழில் முதலீட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவை துறையிலுள்ள

நிறுவனங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சமும், அதிகபட்ச நிதியுதவியாக

ரூ.3 லட்சமும் 6 சதவீதம் வட்டியில் வழங்கப்படும்.

இது குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை(ஜன.12) அம்பத்தூரிலுள்ள அய்மா அலுவலகத்திலும்,

சனிக்கிழமை (ஜன.13) வியாசா்பாடி இ.எச் சாலையிலுள்ள வணிகவளாகத்தில் காலை 11 முதல் 1 மணிவரையும்

நடைபெறுகிறது. இச்சிறப்பு நிதியுதவி முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோா்

அனைவரும், பங்குபெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

SCROLL FOR NEXT