தமிழ்நாடு

கடும் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் பனியுடன் கூடிய புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

DIN

போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் பனியுடன் கூடிய புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

புகை மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். புகை மூட்டத்தால் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊா்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.

புகை மூட்டத்தால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமானங்கள், 8 பன்னாட்டு விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும்  கடும் குளிரில் மக்கள், அதிகாலை முதல் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப் பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT