தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் மங்கலாக தெரிந்த பெரியகோயில். 
தமிழ்நாடு

தஞ்சாவூரில் கடும் பனிப்பொழிவு 

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தஞ்சாவூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் சில நாள்களாக பகலில் மிதமான வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல பனி படர்ந்து கிடந்தது.

இதனால், மாநகர மக்கள் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாநகரில் 10 மணியை கடந்தும் பனியின் தாக்கம் தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT