கோப்புப்படம் 
தமிழ்நாடு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

DIN

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னையில் வசிக்கும் வெளியூா்வாசிகள் வெள்ளிக்கிழமை முதல் பேருந்து, ரயில் மூலம் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டு சென்றனர். 

இந்நிலையில், நேற்று மாலை முதலே சொந்த ஊர்களிலிருந்து வாகனங்களில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டுள்ளனர். இதனால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்குளத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, போக்குவரத்து  காவல் துறையினர் நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT