தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது.
அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(ஜன.19) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.46,480-க்கும், ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.5,810-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ,46,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,780 ஆகவும் விற்பனையானது.
அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.77.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,200-க்கும் விற்பனையாகிறது.