சிதம்பரம்: சிதம்பரம் அருகே கிள்ளை வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான மீனவரின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சின்ன வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மீனவசெல்வன்(51), கிள்ளை பகுதியைச் சேர்ந்த தயாளமூர்த்தி (55) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா். இருவரும் சனிக்கிழமை அதிகாலை மீண்டும் கரைக்கு திரும்பி வந்த போது, வெள்ளாற்று முகத்துவாரத்தில் திடீரென படகு சிக்கி கவிழ்ந்தது.
இதில், மாயமான மீனவசெல்வன் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
இந்தநிலையில், மாயமான மற்றொருவரான மீனவரான தயாளமூர்த்தியை சின்ன வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் கடந்த 15 நாள்களில் மூன்று மீனவர்கள் இறந்துள்ளதால் முகத்துவாரத்தை உடனே ஆழப்படுத்தக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.