மேட்டூர் அணை நிலவரம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 150 கன அடியாக நீடிக்கிறது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 150 கன அடியாக நீடிக்கிறது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 150 கன அடியாக நீடிக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.80 அடியிலிருந்து 70.74 அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 150 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.33 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரை விட, திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.