தமிழ்நாடு

ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நாளை வழங்கப்படும்

DIN

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் என்று ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை நாளை(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜிப்மரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் இருப்பினும் அவசர சிகிச்சைகள் வழக்கம் போல நாளை வழங்கப்படும் எனவும் ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஜிப்மர் விளக்கத்தை ஏற்று மருத்துவமனையை மூட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடம்பூா் மலைப் பகுதியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பா்கூா் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

100 நாள் வேலைத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT