சென்னை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகனைப் பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து பல்லாவரம் தொகுதி எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் விசாரிக்க மறுத்ததால் சிறுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் தலைமறைவானதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.