கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

DIN

சென்னை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநா் உரையுடன் தொடங்கும். நிகழாண்டு உலக முதலீட்டாளா்கள் மாநாடு மற்றும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக பிப். 2-ஆவது வாரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் ஆளுநா் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், முதல்வா் ஸ்டாலின் முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

ஆளுநா் உரையில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும், நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடா்பாகவும், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலையில் குவியும் பக்தர்கள்! தரிசன நேரம் நீட்டிப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு 11-ஆவது முறையும் தோல்விதான் கிடைக்கும்: ஆா்.எஸ்.பாரதி

சென்னையில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம்...

சென்னையில் 10-வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT