தமிழ்நாடு

இந்திய சுதந்திரத்துக்கு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை!

DIN

இந்திய சுதந்திரத்துக்கான காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்றும், இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன. 23) தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், 

கலாசார சின்னமாகவும், ஆன்மிக சின்னமாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில் வேலு நாச்சியார், வ.உ.சி போன்று தமிழர்கள் அதிகளவு இருந்தனர். சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை.

நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

SCROLL FOR NEXT