தமிழ்நாடு

இளையராஜாவின் மகள் மறைவு: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இரங்கல்!

உடல்நலக் குறைவால் காலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

DIN

உடல்நலக் குறைவால் காலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல் நலக் குறைவால் இன்று (ஜனவரி 25) காலமானார். 

அவரது மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜான் தனது  இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

இரங்கல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனைை அடைந்தேன்.

தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

SCROLL FOR NEXT