தமிழ்நாடு

பையா கவுண்டர் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன்  மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன்  மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தியில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கவுண்டம்பாளையம் பகுதியில் அவர் ஆற்றி வந்த மக்கள் தொண்டு மகத்தானது.அவருடைய அயராத சமூகப்பணிகள், அந்த பகுதி மக்களால் மட்டுமின்றி கழகத்தவராலும் என்றென்றும் மறக்க இயலாதது. 

பையா என்ற கிருஷ்ணனின் திடீர் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பையா களப்பணியும், கழகப் பணியும் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT