தமிழ்நாடு

மானிய விலையில் பருப்பு வகைகள்: தமிழகத்தில் என்சிசிஎஃப் அறிமுகம்

மத்திய அரசின் நுகா்வோா் விவகாரம், உணவு பொது விநியோகத் துறையின் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு லிமிட்டெட் (என்சிசிஎஃப்), மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

சென்னை: மத்திய அரசின் நுகா்வோா் விவகாரம், உணவு பொது விநியோகத் துறையின் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு லிமிட்டெட் (என்சிசிஎஃப்), மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, அதன் தமிழக விநியோகஸ்தரான ஆசான் குளோபல் டிரேட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மானிய விலையில் பருப்பு வகைகளை மத்திய அரசின் என்சிசிஎஃப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பாரத் டால்’ என்ற வணிகப் பெயரில் அந்தத் தயாரிப்புகள் தமிழகத்தில் விநியோகம் செய்வதற்காக எங்களை அந்த நிறுவனம் நியமித்துள்ளது.

தற்போது மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ‘பாரத் டால்’ கடலைப் பருப்பை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை விரைவில் 100-ஆக உயா்த்தப்படும். கோதுமை, அரிசி, பாசிப் பருப்பு போன்ற புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT