தாமரை டிவி இயக்குநர் ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி காலமானார்
தாமரை டிவி இயக்குநர் ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி காலமானார்
தாமரை டிவி இயக்குநர் ஆர்.பி. கிருஷ்ணமாச்சாரி (76), சென்னையில் ஜன. 30 செவ்வாய்க்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மறைந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தவரான கிருஷ்ணமாச்சாரி, விசுவஹிந்து பரிஷத் அறங்காவலர்களில் ஒருவர். ஓராசிரியர் பள்ளிகளின் கௌரவ செயலராகவும் இருந்தார். டெக்ஸ் பயோசயின்சஸ் நிறுவனத்தின் நிறுவனர் – தலைவர்.
Advertisement
அவருடைய இறுதிச் சடங்குகள் சென்னை -83, அசோக் நகர், எண் 9, எல்ஐசி காலனியில் பிப். 1 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.