தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும்!

DIN

சென்னையில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் சென்னையிலும் ஆங்காங்கே இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாலையிலும் இரவிலும் மழை பெய்வது கடந்த சில நாள்களாக வாடிக்கையாகிவிட்டது. வெள்ளிக்கிழமை(ஜூலை 5) சென்னையில், கோடம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர் உள்பட பல பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

தஞ்சையில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

SCROLL FOR NEXT