முகப்பு
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா

ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி: சிபிஐ விசாரணை அவசியம் என பிரேமலதா

Updated On : 6 ஜூலை, 2024 at 7:49 PM
பிரேமலதா
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. கடந்த 3 மாதத்தில் 6 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு 70 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலனோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

கொலை செய்தவர்கள் எந்த அரசியல் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.