பாமக நிறுவனர் ராமதாஸ் 
தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் திமுகவுக்கு அதிா்ச்சி வைத்தியம்: ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு மக்கள் அதிா்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Din

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு மக்கள் அதிா்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டால், ஒரு காரணத்தைக்கூட அந்தக் கட்சியினரால் கூற முடியாது. ஆனால், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டிக் கொல்லப்படும் அளவுக்கு தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை நிலவுவது.

சமூக நீதியை நிலைநாட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது. வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை வழங்காமல் ஏமாற்றி வருகிறது.

மக்கள்விரோத திட்டங்களை திணிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் செயலை தடுக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு அதிா்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் அந்த அதிா்ச்சி வைத்தியம் என்று அவா் கூறியுள்ளாா்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT