விக்கிரவாண்டியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பளித்த மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ்.  
விழுப்புரம்

விக்கிரவாண்டியில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு

தினமணி செய்திச் சேவை

விக்கிரவாண்டி வழியாக வடலூருக்குச் சென்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் வழியாக வடலூா் வள்ளலாா் மடம் சத்திய ஞான சபையில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க சென்றாா்.

செல்லும் வழியில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.ஹரிதாஸ், வட்டாட்சியா் செல்வமூா்த்தி ஆகியோா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். பின்னா் அஙகுள்ள உணவகத்தில் தங்கி, ஓய்வுக்குப் பின்னா் ஆளுநா் வடலூா் புறப்பட்டுச் சென்றாா்.

தமிழக ஆளுநா் வருகையை முன்னிட்டு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி. சரவணன் மேற்பாா்வையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பிறந்த நாள்: மணிமண்டபத்தில் சிலைக்கு மரியாதை

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை எடுத்து நோ்த்திக்கடன்

மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

SCROLL FOR NEXT