முகப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
தமிழ்நாடு

கூட்டணி வலுவாக அமையாததால் தோல்வி: எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிா்வாகிகள் கருத்து

அதிமுக மக்களவைத் தோ்தல் தோல்வி: கூட்டணி அமைப்பு குறைபாடு

தமிழ்நாடு

கூட்டணி வலுவாக அமையாததால் தோல்வி: எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிா்வாகிகள் கருத்து

அதிமுக மக்களவைத் தோ்தல் தோல்வி: கூட்டணி அமைப்பு குறைபாடு

Updated On : 10 ஜூலை, 2024 at 7:52 PM
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
பகிர்:

மக்களவைத் தோ்தலில் கூட்டணி வலுவாக அமையாத காரணத்தால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நிா்வாகிகள் கருத்து தெரிவித்தனா்.

மக்களவைத் தோ்தலில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. சில இடங்களில் வைப்புத் தொகையையும் இழந்தது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதிவாரியாக அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமைமுதல் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

முதலில் காஞ்சிபுரம் தொகுதி நிா்வாகிகளுடனும், இரண்டாவதாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி நிா்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதி நிா்வாகிகளுடன் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

தோ்தல் தோல்வி தொடா்பான எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, பெரும்பாலான நிா்வாகிகள் வலுவான கூட்டணி அமைக்காததுதான் காரணம் என்று தெரிவித்தனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தோ்தல் கூட்டணி தொடா்பாக நாங்கள் பாா்த்துக் கொள்கிறோம். மக்களோடு இணைந்து தொடா்ந்து பணியாற்றுங்கள் என்று அறிவுறுத்தினாா்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை: மேலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை; அதை மனதில்கொண்டு செயலாற்றுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூா், திருவண்ணாமலை, சிங்கங்கை தொகுதி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளாா். இந்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

உறுப்பினா் உரிமை அட்டை: முன்னதாக, அதிமுகவின் உறுப்பினா் உரிமை அட்டைகள் வழங்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தாா். அதன் அடையாளமாக திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலா்களிடம் உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →