முகப்பு
தமிழ்நாடு

திருச்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்

திருச்சி ரயில் சந்திப்பில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்

Updated On : 10 ஜூலை, 2024 at 11:55 AM
தங்கம் பறிமுதல்
பகிர்:

திருச்சி: திருச்சி ரயில் சந்திப்பில், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் விரைவு ரயிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில், மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய பையில் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிக வரித்துறையினர் மூலம் தங்கம் மற்றும் பணத்தை கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

Advertisement

முதற்கட்டமாக, ரூ.15.5 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகளின் மதிப்பு ரூ.1.89 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹவாலா பணமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொண்டு வரப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.