குணா படம் 
தமிழ்நாடு

குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை: உயா்நீதிமன்றம்

கமல்ஹாசன் நடித்த குணா படம் மறுவெளியீட்டுக்கு தடை

Din

நடிகா் கமல்ஹாசன் நடித்து, 1991-ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் வெளியான பின், நடிகா் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் பதிப்புரிமையை தான் வாங்கியுள்ளதாகக் கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ், குணா படத்தை மறுவெளியீடு செய்ய பிரமிட் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் மற்றும் எவா் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவா் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT