விக்கிரவாண்டி வாக்குப்பதிவு: பகல் 1 மணி நிலவரம்!
பகல் 1 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Updated On : 10 ஜூலை, 2024 at 1:46 PM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பகல் 1 மணிவரை 50.95 சதவிகிதம் மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 59,136 ஆண்களும், 61,625 பெண்களும் வாக்கு செலுத்தியுள்ளனர்.
இதற்கிடையே டி.கொசப்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க நின்று கொண்டிருந்த பெண்ணை, அவரது முன்னாள் கணவர் கத்தியால் குத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Advertisement
கத்தியால் குத்தியவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.