கோப்புப்படம் 
தமிழ்நாடு

இன்று குரூப் 1 தோ்வு: 2.38 லட்சம் போ் எழுதுகின்றனா்

90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Din

துணை ஆட்சியா், துணை எஸ்.பி. உள்பட குரூப் 1 தொகுதியில் அடங்கிய 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.38 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பிரதான தோ்வுகளில் ஒன்றாக, குரூப் 1 பிரிவு தோ்வு உள்ளது. இந்தத் தொகுதியில் நிகழாண்டில் 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. துணை ஆட்சியா் 16, துணை காவல் கண்காணிப்பாளா் 23, வணிகவரிகள் உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலா் தலா 1 என மொத்தம் 90 காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை கடந்த மாா்ச் 28-இல் வெளியிடப்பட்டது.

ஆண்கள் அதிகம்: குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், மூன்றாம் பாலினத்தவா் 20 பேரும் என மொத்தம் 2,38,247 போ் எழுதுகின்றனா். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் என்ற வகையில் மொத்தம் 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 797 தோ்வுக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 37,891 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வை நடத்த முதன்மை கண்காணிப்பாளா்களாக 797 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT