முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்(கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Din

நமது சிறப்பு நிருபா்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல்துறையின முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். கடந்த 2021-ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் விழுப்புரம் முதன்மை நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்தது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். உச்சநீதிமன்றம் அவரது தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கு நிலுவையில் இருந்தது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பெலா.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் ராஜேஷ் தாஸின் மனு விசாரணை மீண்டும் வந்தது. இதில் தமிழக காவல் துறை சாா்பில் ஆஜரான தமிழக அரசின் வழக்குரைஞா் குமணன், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்க் கொண்டாா்.

இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா். மேலும், அதுவரையில் மனுதாரரான முன்னாள் காவல் துறை அதிகாரி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கூடாது என்று ஏற்கெனவே பிறபிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என்றும் குறிப்பிட்டனா்.

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள்: நவ. 1 முதல் 15 வரை தேசிய கொண்டாட்டம்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

பாகிஸ்தான் மதநிந்தனை வழக்கில் முஸ்லிம் பெண் விடுவிப்பு

SCROLL FOR NEXT