நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிறன்று ரத்து!
நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை ஞாயிறுக்கிழமை (ஜூலை 14) ரத்து செய்யப்படுகிறது.
மதுரை: நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை ஞாயிறுக்கிழமை (ஜூலை 14) ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.35 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) ஆகியன நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.