மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் என சீசன் களைகட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
குற்றாலம் பேரருவியின் மையப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியிலும் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் வகையில் காவல்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.