முகப்பு
தமிழ்நாடு

குற்றவாளிகள் தப்பியோடும் போது சுட்டுத்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது: அமைச்சர் எஸ். ரகுபதி

திமுகவினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:20 AM
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
பகிர்:

குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடும்போது சுட்டுதான் பிடிக்க வேண்டியிருக்கிறது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி, மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீஸார் பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை.

திமுகவினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்களும் பணம் கொடுக்கவில்லை; பாமகவினரும் பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதிமுக புறக்கணித்திருக்கிறது. இந்த நிலையில் திமுக பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்ற வெற்றியை விக்கிரவாண்டி மக்கள் தந்திருக்கிறார்கள் என்றார் ரரகுபதி.

முழு கட்டுரையைப் படிக்க →