தமிழ்நாடு

லாரி ஓட்டுநர் வீட்டில் தீக்குளிப்பு! நண்பர்கள் உள்பட மூவர் பலி

உடல் கருகி உயிரிழப்பு...

DIN

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள முத்துக்கவுண்டன்புதூரில் லாரி ஓட்டுநர் அழகுராஜா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பெட்ரோல் லாரி ஓட்டுநரான அழகுராஜா டேங்கர் லாரி மோதி ஆசிரியை ஒருவர் பலியான வழக்கில் கைதாகி, அதனைத்தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு பின், சொந்த ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில், முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள தனது வீட்டில் திங்கள்கிழமை (ஜூலை 15) நள்ளிரவில் ஓட்டுநர்கள் அழகுராஜா மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமார், சின்னகருப்பு, தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 தங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மன உளைச்சலில் இருந்த அழகுராஜா தனது நண்பர்களுடன் மது அருந்தியபோது, திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அழகுராஜாவை நண்பர்கள் 6 பேரும் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

அதில் எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் மீதும் தீப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துளனர். அதில் அழகுராஜா உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம்: நவ. 23, 24ல் முக்கிய ஆலோசனை!

திருச்சி காவலர் குடியிருப்பு படுகொலை மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது: அண்ணாமலை

பிக் பாஸுக்கு பழனிசாமி ஆமாம் சாமி போடுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும்" திருச்சியில் முதல்வர் Stalin

கிரெடிட் கார்டில் செலவிடுவது அதிகரிப்பு! செப்டம்பரில் மட்டும் 2.17 லட்சம் கோடி!!

SCROLL FOR NEXT