ராணிப்பேட்டை - ஆற்காடு பாலாறு பாலம் 
தமிழ்நாடு

ராணிப்பேட்டை - ஆற்காடு பாலாறு பாலம் மூடப்படுகிறது!

பாலாறு புதிய மேம்பாலத்தில் ஜூலை 19 முதல் ஒரு மாதத்துக்கு போக்குவரத்து தடை.

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு இடையேயான பாலாறு புதிய மேம்பாலம் பராமரிப்பு சீரமைப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 19 வரை வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலைத் துறை தடை விதித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, ராணிப்பேட்டை இடையிலான பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் வரும் 19.07.24 வெள்ளிக்கிழமை முதல் ஒரு மாதக்காலம் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தில்லை திருமண மண்டபம் இடதுபுறமாக வளைந்து தெங்கால் வழியாக வாலாஜா டோல்கேட் இணைப்பு சாலையில் செல்ல வேண்டும்.

அதேபோன்று வேலூரிலிருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஏ2பி உணவகம் எதிரே உள்ள இணைப்பு சாலையில் சென்று ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து செல்ல வேண்டும்.

மேலும், சென்னையிலிருந்து வாலாஜா வழியாக வேலூர் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் தெங்கால் வழியாகவே சென்று தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு புத்துயிர்: அஸ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT