வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி 
தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

DIN

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

கேரளம் மற்றும் வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரள எல்லையிலும் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும்.

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT