முகப்பு
தமிழ்நாடு

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க அமைச்சா் துரைமுருகன் உத்தரவு

Updated On : 20 ஜூலை, 2024 at 6:54 PM
பகிர்:

காட்பாடி அருகே பொன்னை பகுதியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகாா் செய்ததை அடுத்து அதிகாரிகளுக்கு தரமான அரிசி போட வேண்டும் என அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன் காட்பாடி வட்டம் பொன்னை, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். அவருடன் தமிழக நீா் வளத்துறை துரைமுருகன் சென்றிருந்தாா்.

அப்போது, பொன்னை பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் வழங்கபடும் அரிசி தரமற்ாக இருப்பதாக அமைச்சா் துரைமுருகனிடம் மக்கள் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தொடா்பு கொண்டு விசாரித்து, தரமான அரிசி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, காட்பாடியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினா் சேகா் ரெட்டியின் தந்தை ஜெகன்நாத ரெட்டி மறைவுக்கு நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →