லேசான மழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

ஜூலை 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

DIN

தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், இன்று(ஜூலை 22) முதல் ஜூன் 28 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள் இன்று முதல் ஜூலை 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டா‘மென்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழை: வீடு இடிந்து சேதம்

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT