முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2024 at 9:44 AM
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
பகிர்:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

Advertisement

தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 48-ஆவது முறையாக அண்மையில் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments