முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை இறுதி விசாரணைக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 24 ஜூலை, 2024 at 10:18 PM
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப் படம்.)
பகிர்:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை இறுதி விசாரணைக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக சாா்பில் வழக்குரைஞா் இன்பதுரை, பாமக வழக்குரைஞா் பாலு, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பாா்த்தசாரதி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ஸ்ரீதரன், பாஜக வழக்குரைஞா் மோகன்தாஸ் ஆகியோா் உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடா்ந்தனா். இவை ஒரே வழக்காக  விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமாா், நீதிபதி குமரேஷ் பாபு அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சாா்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ் ராமன், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தாா். மேலும், இதுவரை 24 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தாா்.  இதையடுத்து, இடைக்கால அறிக்கைக்கு மனுதாரா்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக வழக்கை ஆக. 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →