சென்னை பேருந்துகள்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம்

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக்கழம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.

மேலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி கட் பேருந்து, தடம் எண்.104சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.

அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பேருந்து, தடம் எண்.104சிஎக்ஸ்(CX) என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT