கனமழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்!

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..

DIN

நீலகிரி, கோவையில் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

மேந்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஜூலை 8.30 மணியளவில் நிலவுகிறது. இது அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஜூலை 26,27களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்பகதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்,

நீலகிரி, கோவை மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

ஜூலை 26 வரை மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 41 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

தெரியுமா?

SCROLL FOR NEXT