சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

தமிழா்களுக்கு எதிராக கருத்து: மத்திய அமைச்சா் மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா? உயா்நீதிமன்றம்

மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே, செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா?

Din

தமிழா்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே, செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா என அரசுத் தரப்பில் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழா்களை தொடா்புபடுத்தி மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக திமுக சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஷோபா சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘எந்த உள்நோக்கமும் இல்லாமல் வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியே, இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. பெங்களூரிலும் இது தொடா்பாக, பதியப்பட்ட வழக்குக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனது கருத்துக்கு ‘எக்ஸ்’ தளத்தில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது’ என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மன்னிப்பு கோரிய விவகாரம் தொடா்பாக அரசின் கருத்தை அறிய வேண்டும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, இதுபோன்ற வழக்கில் பொதுக் கூட்டத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.  அதே போல, செந்தியாளா்கள் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ளப்படுமா என அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT